Thottalla River Roars Near Thenkanikottai; Volunteers Highlight Potential for 12 Check Dams | Hosur News Update - Video
Thottalla River Roars Near Thenkanikottai; Volunteers Highlight Potential for 12 Check Dams
📅 வெளியீடு நாள்: 22-09-2026
📄 விளக்கம்
Thottalla River is flowing with strong force near Arulalam in the Thenkanikottai region, creating a waterfall-like spectacle. The 46-km river originates near Arulalam and joins the Cauvery near Rasimanal. Volunteers highlight the potential for check dams at around 12 locations and point to similar water-conservation structures in neighbouring Karnataka.
தொட்டல்லா ஆறு, அருவியாக ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சி!
காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்று தொட்டலா ஆறு. தேன்கனிக்கோட்டை அடுத்த அருளாளம் சிற்றூரின் அருகில் தோன்றும் இந்த ஆறு, ராசிமணல் அருகே காவிரி ஆற்றுடன் கலக்கிறது. தொட்டல்லா ஆறு சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் நீர்ப்பிடிப்பு நிலப்பரப்பை அஞ்சட்டி சுற்றுவட்டார காடுகளில் கொண்டுள்ளது.
46 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஆற்றின் குறுக்கே 12 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதே போன்ற ஆறுகள் அஞ்செட்டி அருகே கர்நாடகாவில் நிரலகட்டி மற்றும் சிக்கொண்டனஹள்ளி கேரே ஏரிகளில், கர்நாடக அரசு தடுப்பணை கட்டி எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
"நாமாக செயல்படாவிட்டாலும், பிறரின் செயல்களில் உள்ள நல்லவற்றை நமது அரசு பின்பற்றலாமே", என எடுத்துரைக்கின்றனர் தன்னார்வலர்கள்.








