Young Girl Appeals for De-Addiction Centre at Old Hosur Government Hospital | Hosur News Update - Video
Young Girl Appeals for De-Addiction Centre at Old Hosur Government Hospital
📅 வெளியீடு நாள்: 24-05-2026
📄 விளக்கம்
A young resident of Hosur has appealed to Tamil Nadu Chief Minister Vijay anna to establish a medical rehabilitation and de-addiction centre at the old Hosur Government Hospital campus.
The appeal emphasizes the need for structured treatment and rehabilitation facilities for people struggling with addiction and urges the government to repurpose the historic hospital complex for public welfare.
The proposal has drawn attention among local residents and social volunteers.
முதலமைச்சர் விஜய் அண்ணாவுக்கு வணக்கம்.
அண்ணா, ஓசூரில் வாழும் உங்கள் தங்கச்சி உங்கள்ட்ட வைக்கும் ஒரு கோரிக்கை.
நீங்க பதவியேற்றது முதல் மது மற்றும் போதைப் பழக்கங்களுக்கு எதிராக நீங்க எடுத்துட்டு வர்ற நடவடிக்கைகளும், முயற்சிகளும் எல்லாராலையும் பாராட்டப்படுது.
போதை பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடற அண்ணா-அக்காக்கள் அப்பா-அம்மாக்கள், அதுல இருந்து முழுசா விடுபடனும்னா, அவங்களுக்குன்னு ஒரு மறுவாழ்வு மையமும், அத்த தீய பழக்கத்தில இருந்து விடுபட முறையான மருத்துவ டி-அடிக்சன் சென்டரும் தேவை.
ஓசூர் அரசு மருத்துவமனை, தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டடத்திற்கு மாற்றமாகி போயிருச்சு. சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள அந்த பழைய அரசு மருத்துவமனை கட்டிடம், அப்படியே பயன்படுத்தும் நிலையில தான் இருக்குதுன்னு சொல்றாங்க.
அந்த பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில, மருத்துவம் சார்ந்த மறுவாழ்வு மற்றும் டி-அடிக்சன் சென்டர் அமைச்சு, போதை பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட முயற்சி செய்றவங்களுக்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கிறேன்.
ஓசூர், தமிழ்நாட்டின் கோடை நாட்களில் கூட பெரிய அளவுல வெப்ப தாக்கம் இருக்காது. அதனால, இது போன்ற ஒரு மையம், அந்த கட்டடத்தில் அமைச்சீங்கன்னா, ஏராளமான உங்க தம்பி தங்கையர்கள், தங்களுடைய பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர போதை என்னும் அடிமை பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க உதவும்.
இந்த தங்கச்சியின் வேண்டுகோள் ஏற்புடையதாக இருந்தால், இந்த வேண்டுகோள நடைமுறைப்படுத்த முடியுமான்னு பாருங்க. நன்றி அண்ணா.








