Fire-Walking Ritual for Rain Observed Near Anchetty in Hosur Region | Hosur News Update - Video
Fire-Walking Ritual for Rain Observed Near Anchetty in Hosur Region
📅 வெளியீடு நாள்: 09-04-2026
📄 விளக்கம்
A traditional fire-walking ritual was observed in Jeenmanatham village near Anchetty, close to Hosur, as part of the annual Mariamman temple festival.
The temple, believed to date back to the Chola and Hoysala periods, holds cultural and historical significance.
As part of the festival, devotees walked across fire as an expression of faith and gratitude, with a belief that it helps bring rain.
People from over 18 surrounding villages participated in the event.
ஓசூர் அடுத்த, அஞ்செட்டி பகுதியில் மழைக்காக… தீ மிதிக்கும் வழிபாடு!.
மாரி என்றால் மழை… தமிழர்களின் வாழ்வில், மழையை தரும் கடவுளாக மாரியம்மன் வழிபாடு தனி இடம் பெற்றுள்ளது…
அந்த நன்றிக்காகத்தான்… ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள்…
கோட்டையூர் மற்றும் உரிகம் அருகே அமைந்துள்ளது ஜீன்மாநத்தம். சோழர், ஒய்சாளர் காலத்தைச் சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் இங்கு அமைந்துள்ளது.
கடந்த நாள் இக்கோவிலில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக… பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்தினர்.
18-க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
மழைக்காக வேண்டிய நம்பிக்கை… இன்றும் தொடர்கிறது…








