Hosur Potatoes Play Key Role in Supply to Ooty Region | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Potatoes Play Key Role in Supply to Ooty Region

📅 வெளியீடு நாள்: 03-05-2026

📄 விளக்கம்

Hosur-grown potatoes are widely used in Tamil Nadu and Kerala, especially for chip production.

Unlike potatoes from some northern regions, Hosur varieties are considered more suitable for processing.

They are also used as seed potatoes in areas like Mettupalayam near Ooty.

Potato cultivation in Hosur spans around 500 acres and contributes significantly to regional supply.

சூரியனுக்கே டார்ச்சா?… ஊட்டிக்கே உருளைக்கிழங்கு சப்ளை செய்யும் ஓசூர்!.

பொதுவாக, ஊட்டியில் விளையும் கேரட், பீட்ரூட் போன்றவை, ஓசூர் காய்கறிகளை விட உயர் தரமும், அதனால் உயர் விலையும் கொண்டவை.

ஆனால், உருளைக்கிழங்கின் கதை வேறு!

வடமாநிலங்களில் இருந்து வரும் உருளைக்கிழங்கு இனிப்பு தன்மை கொண்டதால், சிப்ஸ் உற்பத்தி செய்ய ஏற்றது இல்லை.

அதனால், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சிப்ஸ் உற்பத்தி செய்வோர் விரும்புவது ஓசூர் உருளைக்கிழங்கு!.

ஓசூரில் சுமார் 500 ஏக்கரில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும், மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி அடிவாரப் பகுதிகளில் சாகுபடிக்கான விதைக்கிழங்காகவும்
ஓசூர் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.

ஓசூரில் விளையும் உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு மொத்த விலையில் சிப்ஸ் உற்பத்தியாளர்களுக்கு விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு என்றால், ஊட்டியாக இருந்தாலும், சிப்ஸ் போடுவதற்கு ஓசூரில் இருந்து தான் வாங்க வேண்டும்!.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads