Irular Tribal Community Near Hosur Appreciated for Maintaining Clean Surroundings | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Irular Tribal Community Near Hosur Appreciated for Maintaining Clean Surroundings

📅 வெளியீடு நாள்: 26-05-2026

📄 விளக்கம்

The Irular tribal community living at Kodagarai near Hosur is being appreciated for maintaining clean homes and surroundings despite limited economic resources and basic living conditions.

Government-supported housing construction for the community is currently underway under district administration monitoring.

Officials stated that 36 houses have been completed so far, while construction of the remaining houses is progressing.

ஓசூர் காடுகளில் தூய்மையின் எடுத்துக்காட்டாக வாழும் பழங்குடியின மக்கள்!

"கந்தல் ஆனாலும் கசக்கி கட்டு" என்று தமிழில் முதுமொழி உண்டு. அதாவது, "கிழிந்த ஆடையை அணிவதாக இருந்தாலும், அதை முறையாக துவைத்து அணிந்து கொள்" என்பதாகும்.

ஓசூர் அடுத்த கொடகரையில் வாழும் இருளர் இன பழங்குடியின மக்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்கின்றனர்.

ஏழ்மையான வாழ்க்கையை, கிடைக்கின்ற பொருட்களை வைத்து வேய்ந்த குடிசையில் வாழ்ந்தாலும், தங்களது வீடுகளையும், சுற்றுப்புறத்தையும், குறிப்பாக தெருக்களையும் தூய்மையாக வைத்துள்ளது பாராட்டுக்குரியது.

இம்மக்களுக்காக, 102 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒப்பந்ததாரர் காலம் தாழ்த்தியதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களின் நேரடி கண்காணிப்பில், இதுவரை 36 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 66 வீடுகள் கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வீடும், 323 சதுர அடி வீதம் கட்டிக் கொடுக்கப்படுகிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads