12 Kg Ganja Seized at Border Checkpost Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

12 Kg Ganja Seized at Border Checkpost Near Hosur

📅 வெளியீடு நாள்: 27-05-2026

📄 விளக்கம்

Police at the Kothaseegur border checkpost near Hosur seized 12 kilograms of ganja during a vehicle inspection operation.

Authorities stated that three persons traveling on a scooter without a registration number were intercepted. One suspect was arrested while two others reportedly escaped.

Police investigations are continuing.

ஓசூர் மத்திகிரி காவல்துறையினர் அதிரடி. 12 கிலோ கஞ்சா பறிமுதல்.

மத்திகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூனப்பள்ளி அருகே அமைந்துள்ள கொத்தசீகூர் எல்லை சோதனை சாவடியில் தலைமை காவலர் சக்திவேல் தலைமையிலான காவல்துறையினர் கடந்த நாள் பிற்பகல் ஒரு மணி அளவில் வண்டிகளை தணிக்கை செய்து வந்துள்ளனர்.

அப்போது, எண் பொறிக்காத ஒரு ஸ்கூட்டரில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டதில், ஆனைக்கல் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி பைரமங்கலத்தில் விற்க முயற்சி செய்தது கண்டறியப்பட்டது.

இருவர் தப்பி ஓடி விட்ட நிலையில், பைரமங்கலத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads