People Continue Using Route Near Perandapalli Despite Blasting Warnings, Safety Concerns Raised | Hosur News Update - Video
People Continue Using Route Near Perandapalli Despite Blasting Warnings, Safety Concerns Raised
📅 வெளியீடு நாள்: 02-06-2026
📄 விளக்கம்
As STRR construction and blasting operations continue near Perandapalli, volunteers have raised concerns over commuters using unofficial routes through the work zone.
ஓசூரில் "வெடிகுண்டு வெடிக்கும்" என எச்சரிக்கை... இருந்தும் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் மக்கள்!
எஸ் டி ஆர் ஆர் நெடுஞ்சாலை பணி நடைபெறுகிறது. பேரண்டபள்ளி அருகே, மலைகளைக் குடைந்து, பாறைகளை தகர்த்து, சாலை அமைத்து வருகின்றனர்.
அப்பகுதியில், வெடிகுண்டுகள் வைக்கப்படுகின்றன, எல்லை தாண்டி வரவேண்டாம் என எச்சரிக்கை பலகை உள்ளது. எச்சரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு, ஓசூர் பத்தலபள்ளி நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்கும், குறுக்கு வழி என கருதியும், இவ்வழியாக பயணிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் இதில் உடனடி கவனம் செலுத்தி, உயிர் பலிகள் ஏற்படாத வகையில், பணி நடக்கும் பகுதியில் முழுமையான தடுப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.








