Attempted House Break-In Reported in Varadharajapalayam Near Denkanikottai | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Attempted House Break-In Reported in Varadharajapalayam Near Denkanikottai

📅 வெளியீடு நாள்: 17-02-2026

📄 விளக்கம்

An attempted theft was reported in Varadharajapalayam village near Denkanikottai. A 70-year-old resident found his house door open upon returning home and noticed an unidentified youth inside the premises. The individual allegedly fled the scene. A complaint has been filed, and police are investigating the matter.

ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே வரதரெட்டிபாளையம் ஊரில், 70 வயது முதியவரை கண்டு ஓடிய 29 வயது இளைஞர்!

திரைப்படம் ஒன்றில், நகைச்சுவைக்காக அரிசி கடை ஒன்றில் தராசை திருட வந்த இடத்தில், நடிகர் வடிவேலு "நாங்க ஏதேதோ திட்டம் போட்டு வந்தோம். இப்போ பாதியிலேயே போக வேண்டியதாயிற்று" என்று கூறுவதை நினைவுபடுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது.

70 வயது வெங்கட்ராமா, வீட்டின் கதவை பூட்டாமல் சாத்திவிட்டு காலையில் தோட்ட வேலைக்காக களத்திற்கு சென்றாராம். பின்னர் சுமார் 8 மணி அளவில் வீடு திரும்பிய போது, கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாராம். உள்ளே சென்று பார்த்த போது, அதே ஊரைச் சேர்ந்த 29 வயது முனிராஜ், வீட்டினுள் நின்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். "என் வீட்டினுள் உனக்கு என்ன வேலை?" என முதியவர் கேட்க, "திருட வந்தேன், நீங்கள் அதற்குள் வந்து விட்டீர்கள்" என கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக புகார்.

தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முனிராஜ் தலைமறைவாக உள்ளார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads