HosurOnline
HosurOnline  ›  Hosur News  ›  ஓசூர் அருகே சாலையோரம் கிடந்த நாட்டு துப்பாக்கி
Hosur News · ஓசூர் செய்திகள்

Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் அருகே சாலையோரம் கிடந்த நாட்டு துப்பாக்கி

ஓசூர் அருகே சாலையோரம் கிடந்த நாட்டு துப்பாக்கி


ஓசூர் அருகே குந்துகோட்டை ஊர் அரிலே உள்ளது, சாலிவரம் என்கிற ஊர்.  

அதற்கு செல்லும் சாலையில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

தேன்கனிக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் குந்துகோட்டையில் இருந்து சாலிவாரம் செல்லும் சாலையில் வழக்கமான ரோந்து சென்றனர்.

அப்போது, குந்துகோட்டை சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த  நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தாமாக முன்வந்து நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்கலாம் என்றும் காவல்துறை அறிவிப்புகள் வெளியிட்டு வரும் நிலையில் இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி குறித்து காவலர்கள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Post: Facebook X / Twitter

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்