🌤️ Hosur Weather Update – Temperature, wind, rain possibilities.
📿 Hosur Panchangam – Tamil calendar highlights for the day.
🌟 Daily Astrology – Zodiac predictions & rasi palan.
📰 Top Hosur News – A quick roundup of today’s local headlines.
🎧 Listen now and stay updated with what matters in and around Hosur.
🗓️ Episode Date: 03 June 2025
📍 Language: Tamil
Share this podcast with friends & family in Hosur – let’s stay informed together!
Follow us on https://youtube.com/@hosuronline and https://creators.spotify.com/pod/show/hosuronline for daily updates.
நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் எட்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபது. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் நூற்றி பதினொன்று.
தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனபள்ளி அருகே, தல்சூர் எனும் ஊரைச் சேர்ந்த மூர்த்தி, தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே, கடந்த பத்து ஆண்டுகளாக முடி சீர்திருத்தும் கடை வைத்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து, மாணாக்கர்களுக்கு, ஒரு ரூபாய் கட்டணத்தில், தலைமுடி சீர்திருத்தம் செய்வதாக அறிவித்திருந்தார். ஏராளமான மாணவர்கள் இதனால் பயனடைந்தனர்.
கர்நாடகாவில் இருந்து சூசூவாடி வழியாக, நூற்றி ஐம்பது கிலோ போதை பொருள் கடத்திய பெங்களூருவைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
"லகு உத்யோக் பாரதி" என்கிற குறு மற்றும் சிறு நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஓசூரில் தொழில் முனைவோர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், லேபர் கட்டணங்களுக்கு விதிக்கப்படும் பண்ணிரெண்டு விழுக்காடு சேவை வரியை, ஐந்து விழுக்காடாக ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என, ஓசூர் பகுதி தொழில் முனைவோர் கோரிக்கை வைத்தனர்.
ஓசூர் ராயக்கோட்டை சாலை மின்வாரிய அலுவலகம் எதிரே, இரண்டு இரு சக்கர வண்டிகள் மோதிக் கொண்ட விபத்தில், 40 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம் அடைந்தார். காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் மற்றும் நான்கு ஆண்டு திமுக அரசின் சாதனை, ஆகியவற்றை கொண்டாடும் விதமாக, இன்று செவ்வாய்க்கிழமை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பில், ஓசூர் மாநகராட்சியின் நாற்பத்தி ஐந்து வார்டுகளிலும், நூற்றி எழுபத்தி ஒன்பது ஒன்றிய ஊராட்சிகளிலும், தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் ஆகிய பகுதிகளிலும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, தூய இருதய ஆண்டவர் கிறிஸ்தவர் கோவிலில், கடந்த நாள் கொடியேற்றத்துடன், தேர் திருவிழா தொடங்கியது. வரும் ஜூன் எட்டாம் நாள், தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகலூர் சாலையில் அறிவிக்கப்பட்ட ஒரு வழிப்பாதை முறையாக கடைபிடிக்கப்படாததால், அவ்வப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தொடர்புடைய அரசு அலுவலர்களும் காவல்துறையினரும் இதில் கவனம் செலுத்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த நாள் ஓசூர் மலைக்கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.








