Hosur’s daily podcast with weather, panchangam, astrology, and top news. Updated every morning by 5 AM. Stay informed with HosurOnline.
🌤️ Hosur Weather Update – Temperature, wind, rain possibilities.
📿 Hosur Panchangam – Tamil calendar highlights for the day.
🌟 Daily Astrology – Zodiac predictions & rasi palan.
📰 Top Hosur News – A quick roundup of today’s local headlines.
🎧 Listen now and stay updated with what matters in and around Hosur.
🗓️ Episode Date: 04 June 2025
📍 Language: Tamil
Share this podcast with friends & family in Hosur – let’s stay informed together!
Follow us on https://youtube.com/@hosuronline and https://creators.spotify.com/pod/show/hosuronline for daily updates.
நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் ஒன்பதாயிரத்து என்பது. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் நூற்றி பதிமூன்று. நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் எட்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபது. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் நூற்றி பதினொன்று.
ஓசூர் அடுத்த பாகலூர் அருகே, பி முதுகானபள்ளியைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. நண்பரிடம் வாங்கிய கடன் ரூபாய் பத்தாயிரத்தை, கடந்த மே இருபத்தி ஐந்தாம் நாள், ஃபோன் பே மூலம் திருப்பிச் செலுத்த முயன்றுள்ளார். தவறான எண்ணுக்கு அனுப்பியதால், வேறொரு நபருக்கு சென்று விட்டது. இது தொடர்பாக பாகலூர் காவல் நிலையத்திலும், காவல் துறையினரின் அறிவுறுத்தலின் படி சைபர் கிரைம் புகார் எண்ணிலும் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த எண்ணும் தவரான எண் என்று தெரிய வருகிறது. அந்தப் போலி எண்ணில் பேசியவர், மேற்கொண்டு ரூபாய் ஒரு லட்சத்தை, கூகுள் பே மூலம் பெற்றுக் கொண்டார். ஆக மொத்தம் ஒரு லட்சத்து பத்தாயிரம் இழந்த திம்மராயப்பா, இப்போது கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் துறையினரை உதவிக்கு நாடியுள்ளார்.
பேரிகை அருகே கழிவறைக்குச் சென்ற அரசு பள்ளி மாணவியின் கையைப் பிடித்து இழுத்து தொல்லை கொடுத்ததோடு, உதவிக்கு வந்த இருபத்தி ஏழு வயதுடைய பெண் சத்துணவு சமையல்காரரையும் தாக்கிய பதினெட்டு வயது இளைஞரை, பேரிகை காவல்துறையினர் கைது செய்தனர்.
சூளகிரி அருகே சுண்டகிரி என்ற இடத்தில், பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மாற்றுப் பாதை முறையாக அமைக்கப்படாத நிலையில், சாலை குன்றும் குழியுமாக இருந்ததால், தடுமாறிய சரக்குந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஓசூர் அருகே, அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக புகார்.
ஓசூரில் தி மு க சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.








