கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மோட்டுப்பட்டி கிராஸ் அருகில் உள்ள முருகர் கோவில் மலை அடிவாரத்தில், சட்டத்திற்குப் புறம்பாக, கமுக்கமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு மின்னல் வேகத்தில் விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர்.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட முறையில், சட்டத்திற்கு எதிராக விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான மது குப்பிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரைப் காவல்துறையினர் நிகழ்விடத்திலேயே அதிரடியாகக் கைது செய்தனர்.
அவரிடமிருந்த அனைத்து மது குப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான பெண்ணை பாரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.