HosurOnline

கிருஷ்ணகிரி ஆஞ்சேரி மலையில் அதிரடி: 150 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு - ஒருவர் அதிரடி கைது!

கிருஷ்ணகிரி நகர் காவல் எல்லைக்குட்பட்ட வேட்டியம்பட்டி சென்னகேசவ பெருமாள் கோவில் அருகே உள்ள ஆஞ்சேரி மலைப் பகுதி.  

அப்பகுதியில் கமுக்கமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

தகவல் கிடைத்தவுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் அந்த மலைப் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடியாக காடு, மேடு பாராமல் தீவிர ஆய்வு நடத்தினர். 

அப்போது, அங்கு சட்டத்திற்குப் புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, கள்ளச்சாராய ஊறல் போட்டிருந்த நபரை காவல்துறையினர் நிகழ்விடத்திலேயே அதிரடியாகக் கைது செய்தனர். 

மேலும், அங்கிருந்த சுமார் 150 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை பறிமுதல் செய்து, நிகழ்விடத்திலேயே காவல்துறையினர் கொட்டி அழித்தனர். 

கைதான நபரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள்ர், அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.