HosurOnline

கிருஷ்ணகிரி மக்களுக்கு ஆணையர் வேண்டுகோள்!

கிருஷ்ணகிரி நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நகர்ப்புறங்களில் குப்பை கிடங்குகள் இருக்கக்கூடாது. இதன் அடிப்படையில், வரும் அக்டோபர் 31-ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரி நகராட்சி ‘குப்பை இல்லா நகரம்’ ஆக முழுமையாகச் செயல்பட உள்ளது. 

நகராட்சியின் 33 வார்டுகளில் உள்ள 223 தெருக்களில் வசிக்கும் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து தினமும் 24 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. 

புதிய விதிமுறைகளின்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டு குப்பைகளைத் தரம் பிரித்து மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். தரம் பிரிக்காமல் குப்பை வழங்கினால் அபராதம் மற்றும் சட்டப்பூர்வ மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.