16 வயது சிறுமி கடத்தல்: பேக்கரி ஊழியர் மீது பெற்றோர் புகார்!
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்றதாக, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.வேப்பனஹள்ளி கங்கமடுவு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 25-ஆம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவரது பெற்றோர் வேப்பனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அப்புகாரில், அதே பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்யும் நந்தீஸ் (19) என்பவர், ஆசை வார்த்தை கூறி தங்கள் மகளைக் கடத்திச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வாலிபரையும் சிறுமியையும் தேடி வருகின்றனர்.