கிருஷ்ணகிரி கட்டிக்கானபள்ளி சாய் நகரில் உள்ள சிவகாமி பழனி ஆனந்தம் திருமண மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவைக் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பா. முகுந்தன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து, 5 வகையான கலவை சாதங்கள் மற்றும் மங்களப் பொருட்களுடன் கூடிய சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுகாசினி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சுமதி, வட்டாட்சியர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரியில் சமுதாய வளைகாப்பு: 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கலெக்டர், எம்.எல்.ஏ சீர்வரிசை!
Published:
06 Oct 2026, 05:20 PM
Location:
Krishnagiri
By:
Prakash
Source:
PRO
1 / 4