உலக திறன் போட்டியில் சாதனை: வேப்பனப்பள்ளி வாலிபருக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் பாராட்டு!

1 / 2
திறன்களின் ஒலிம்பிக்ஸ், ஒலிம்பிக்ஸ் ஆப் ஸ்கில்ஸ் என்று அழைக்கப்படும் உலக திறன் போட்டிகள் தொழில் மற்றும் தொழில்நுட்பத் திறன் பிரிவுகளில் உலகின் உயரிய உலகளாவிய போட்டியாக கருதப்படுகின்றன. 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப் போட்டிகள், உலகெங்கிலும் உள்ள திறமை மிக்க இளையோர் தங்களது திறமைகளை உலக அளவில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. 

செப்டம்பர் 22 முதல் 27 வரை சீன நாட்டின் ஷாங்காயில் நடைபெற்ற வேர்ல்ட் ஸ்கில்ஸ் 2026 போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நாச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மின்சாரம் மற்றும் மின்னணு பிரிவு பொறியியல் பட்டதாரியான ராகுல் "இன்டெலிஜென்ஸ் செக்யூரிட்டி டெக்னாலஜி" என்ற பிரிவில் கலந்துகொண்டு "மெடல் ஆப் எக்ஸலன்ஸ் சாதனை" புரிந்துள்ளார். 

கடந்த ஏப்ரல் திங்களில் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற இந்திய அளவிலான திறன் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். 

ஷாங்காயில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி மொத்தம் ஆறு வெள்ளி பதக்கங்களையும் 20 மெடல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் விருதுகளையும் வென்று உள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தனது முகாம் அலுவலகத்தில் ராகுலை சந்தித்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

வரும் நாட்களில் இது போன்ற உலகளாவிய திறன் போட்டிகளில் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு தினேஷ் குமார் அவர்கள் இளையோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

இந்நிகழ்வில் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் மாவட்ட திருநகர் திறன் அலுவலர் சுந்தரம் மற்றும் மாணவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.