கிருஷ்ணகிரி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய ஆட்சியர் தினேஷ் குமார் அழைப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் செப்டம்பர் 29 ஆம் நாள் கடிதத்தின் படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில், 18 வயது நிறைவடைந்த மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், நீக்கவும், திருத்தவும், முகவரி மாற்றங்களை மேற்கொள்ளவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் தொடர்பான திருத்த பணிகள் துவங்கியுள்ளது. 

சிறப்பு தீவிர திருத்த பணி நிறைவடைந்த மாநிலங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இதில் ஏதேனும் ஐயம் எழுந்தால் 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பெயர்களை பதிவு செய்து கொள்வதற்கு, அல்லது வாக்காளர் பட்டியல் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.