இத்திட்டத்தின் மூலம் பயன்பெற:
- விண்ணப்பதாரர் பெயரில் ஒரே இடத்தில் தொடர்ச்சியாகக் குறைந்தது 1 ஏக்கர் நிலமாவது இருக்க வேண்டும் (கூட்டு பட்டா ஏற்கப்படாது).
- கிணறு மற்றும் சோலார் பம்ப்செட் அமைக்க ₹8 லட்சத்திற்கு மேல் செலவானால், கூடுதல் தொகையை வங்கி வரைவோலையாக (DD) வேளாண் பொறியியல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
- பாசனத்திற்கு நுண்ணீர் பாசன அமைப்பை (Micro-irrigation) கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.
- தண்ணீரை உழவிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது.
விருப்பமுள்ள உழவர்க தங்களின் புகைப்படம், சாதி சான்றிதழ், ஆதார், குடும்ப அட்டை நகல், பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் நில வரைபடத்துடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலோ அல்லது ஓசூர் சாணசந்திரம் ராயக்கோட்டை சாலையில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.