Hosur Book Festival: Reading Promotion Programme Held at Government Girls School | Hosur News Update - Video
Hosur Book Festival: Reading Promotion Programme Held at Government Girls School
📅 வெளியீடு நாள்: 09-02-2026
📄 விளக்கம்
As the Hosur Book Festival gains momentum, a reading promotion programme was organised at the Government Girls Higher Secondary School in Seetharam Nagar. Students were given cloth coin bags to encourage saving money for buying books, along with a free Tamil daily newspaper to promote reading habits. The event was attended by school authorities, Lions Club representatives, members of the Tamil Nadu Science Forum, and teachers.
களைகட்டத் துவங்கிய ஓசூர் புத்தகத் திருவிழா. அரசு பள்ளி மாணவிகளை புத்தகம் வாங்குதல் மற்றும் வாசித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக, உண்டியல் பை வழங்கும் நிகழ்ச்சி, ஓசூர் சீத்தாராம் நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியை, ஓசூர் magnum அரிமா சங்கத்தின் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர்கள், பள்ளியின் ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கு புத்தகம் வாங்குவதற்கு பணம் சேமிக்கும் விதமாக, துணியாலான உண்டியல் பை வழங்கப்பட்டது. புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக விலையில்லாமல் தமிழ் நாளிதழ் ஒன்றும் மாணவிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.








