Three Arrested in Tata Electronics Theft Case Near Hosur | Hosur News Update - Video
Three Arrested in Tata Electronics Theft Case Near Hosur
📅 வெளியீடு நாள்: 11-03-2026
📄 விளக்கம்
Police have arrested three suspects, including two brothers, in connection with the theft reported at the Tata Electronics facility near Uthanapalli close to Hosur.
According to police sources, a group of masked individuals allegedly entered the factory premises late at night on March 6 and tied up two security guards. Copper materials and a firearm were reportedly stolen during the incident.
Following an investigation that included reviewing nearby CCTV footage, police arrested three individuals from Dharmapuri district. The stolen copper items and firearm were recovered.
Police are continuing their inquiry into the case.
ஓசூர் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் திருடியவர்கள், ஓசூரில் காயலாங்கடை நடத்துபவர்களா?. அண்ணன், தம்பி உட்பட மூவரை கைது செய்து, காவல்துறையினர் வினவி வருகின்றனர்.
கடந்த ஆறாம் நாள் இரவு முகமூடி அணிந்த எட்டு பேர் கொண்ட கும்பல், உத்தனப்பள்ளி அருகே இயங்கும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்து, அங்கு பணியாற்றிய இரண்டு காவலர்களை கட்டிப்போட்டு, குறிப்பாக, செம்பு உலோகத்தில் ஆன பொருட்கள் மற்றும் ஒரு துப்பாக்கியையும் திருடி சென்றனர்.
இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் அருகில் உள்ள சி சி டி வி காட்சிகளை ஆய்வு செய்து புலனாய்வை தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஓசூர் மற்றும் பெங்களூருவில் பழைய பொருட்கள் கடை நடத்தும், மூன்று பேரை கடந்த நாள் கைது செய்து, திருடிச் சென்ற செம்பு பொருட்கள், மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
விரைவாக செயல்பட்ட உத்தனப்பள்ளி காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.








