HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Gutka Seized After Midnight Police Chase Near Hosur

Published: 23-05-2026  ·  HosurOnline

விளக்கம்

Police intercepted a Scorpio vehicle near the Sambangiri border checkpost close to Hosur after the driver allegedly ignored instructions to stop.

Authorities stated that gutka products and liquor bottles were recovered from the vehicle during inspection.

The driver reportedly escaped, and police are continuing search operations.

ஓசூர் காவல்துறையினர், தொடரும் அதிரடி... மாற்று வழிகளை தேடும் போதை பொருள் கடத்தல் ஆசாமிகள்... நள்ளிரவிலும் விடாமல் துரத்தி பிடிக்கும் காவல்துறை...

சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜுஜுவாடி சோதனை சாவடி மூலம் தொடர்ந்து போதை பொருள் கடத்தல் கண்காணிக்கப்பட்டு, கடத்தல்கள் தடுக்கப்பட்டு வருவதால், மாற்று ஊடுருவல் வழிகளை போதை பொருள் கடத்தல் ஆசாமிகள் நாடுகின்றனர்.

அவ்வகையில், கடந்த நாள், பாகலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சம்பங்கிரி எல்லை சோதனைச் சாவடி வழியாக, நள்ளிரவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி பயங்கர வேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று, காவல்துறையினரின் கட்டளையை மீறி நிற்காமல் விரைந்துள்ளது.

காவல்துறையினர் தங்களது வண்டியில் நள்ளிரவில் அந்த ஸ்கார்பியோ காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து, ஆய்வு மேற்கொண்ட போது, காரினுள் மூட்டை மூட்டையாக குட்கா பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் கர்நாடக மது குப்பிகளும் இருந்துள்ளது.

காருடன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் இருட்டில் தப்பி சென்றுள்ளார். அவரைத் தேடும் பணியும் காவல்துறையினரால் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
பகிர்: WhatsApp X Facebook Threads