Water Supply Restored in Bettamugilalam Areas After Public Appeal | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Water Supply Restored in Bettamugilalam Areas After Public Appeal

📅 வெளியீடு நாள்: 25-05-2026

📄 விளக்கம்

Residents of Kottaiyur Kollai, Siddiq Nagar and Jeyapuram Pudur under Bettamugilalam Panchayat near Denkanikottai say drinking water issues in the region have now been addressed following administrative intervention.

The development comes after a public appeal seeking action over water shortage concerns in the area.

Officials from multiple departments reportedly continued field inspections and repair works even during the weekend to restore water supply.

அப்படி இருந்த நான்… இப்படி ஆகிவிட்டேன்!

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டையூர் கொல்லை, சித்திக் நகர், ஜெயபுரம் புதூர் பகுதிகளில் நிலவிய குடிநீர் தட்டுப்பாடு குறித்து, கடந்த ஏப்ரல் 27ஆம் நாள் மாவட்ட ஆட்சியருக்கு காணொளி வாயிலாக தீர்வு கோரி வேண்டுகோள் வைத்திருந்தோம்.

அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் நேரடி கண்காணிப்பில் மேற்கொண்ட நடவடிக்கையால், குடிநீர் தட்டுப்பாடு இப்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், அரசு அலுவலர்களின் நேரடி கள கண்காணிப்பில் தொடர் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், டுவார்ட் போர்டு, மின்வாரியம், வனத்துறை மற்றும் விடுமுறை நாட்களிலும் ஓய்வு எடுக்காமல் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோருக்கு பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads