Daily Hosur News · Video
Gaganyaan Astronaut Angad Pratap Inaugurates Satellite Ground Station at Hosur Sishya School
விளக்கம்
A detailed report on the inauguration of the new space research laboratory at Sishya School's Mugalur campus. The article covers the visit of ISRO astronaut Angad Pratap, the technical capabilities of the satellite station, and the vision of the school management to promote space science among students.ஓசூரில் இது என்ன புதிது? பள்ளி வளாகத்தில், செயற்கைக்கோள் தரை நிலையம், அதாவது பள்ளி மாணாக்கர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் ஊக்கம் பெற ஒரு சிறப்பு ஆய்வுக்கூடம்!
ஓசூர் சிஷ்யா பள்ளியின் முகலூர் வளாகத்தில், உயர் தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஆண்டனா பொருத்தி, செயற்கைக்கோள் சிமிக்கைகளை கணினி மூலம் மாணாக்கர்கள் ஆராயும் வகையில், ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று, ஐ எஸ் ஆர் ஓ -வின் மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் பெருமைமிகு விண்வெளி திட்டமான கங்கன்யான் திட்டத்தில், விண்வெளி வீரராக பயணிக்க இருக்கும் குழு தலைவர் அங்கத் பிரதாப் பள்ளி வளாகத்திற்கு வருகை புரிந்திருந்தார்.
முதலில், மாணாக்கர்கள் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி, அதை தொடர்ந்து ஆய்வுக்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து, பள்ளியின் மாடியில் ஆண்டனாக்களை இயக்கி செயற்கைக்கோள் தரை நிலையத்தை மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
நிகழ்வில் பள்ளி தாளாளர் திருமதி வசந்தி தியாகராஜன், அறங்காவலர்கள், ஆசிரியர் பெருமக்கள், பள்ளி மாணாக்கர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி வளாகங்களில் இது போன்ற தொழில்நுட்பங்கள் அமல்படுத்துவதால் மாணாக்கர்களுக்கு எவ்வகையில் பயன் தரும்? உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.