Man Arrested in Hosur for Allegedly Impersonating Police Officer with Toy Gun | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Man Arrested in Hosur for Allegedly Impersonating Police Officer with Toy Gun

📅 வெளியீடு நாள்: 02-03-2026

📄 விளக்கம்

A man was arrested in Hosur for allegedly impersonating a police officer and threatening a shop owner using a toy gun.

The incident reportedly took place at a scrap shop in Samathuvapuram on Bagalur Road. The accused allegedly demanded money, claiming to be a police official investigating illegal activities.

The shop owner recorded the interaction and filed a complaint at Nallur Police Station. Police subsequently arrested Manoj from Thottagiri Road and are investigating whether he was involved in similar incidents elsewhere.

ஓசூரில் பொம்மை துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு, போலீஸ் என டூப்ளிகேட் வேடம் போட்டவர் காவல்துறையினரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

பாகலூர் சாலை சமத்துவபுரத்தில், முக்தா என்பவர் பழைய பொருட்கள் கடை வைத்துள்ளார். அந்த கடையில் திருட்டு மின்கலங்கள் விற்கப்படுவதாக கூறி, கையில் துப்பாக்கியுடன், காவல்துறையைச் சேர்ந்தவர் என்ன தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

வந்தவர் உண்மையான காவல்துறையைச் சேர்ந்தவர் இல்லை என புரிந்து கொண்ட முக்தா, தனது கைபேசி மூலமாக காணொளி பதிந்து, நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் விரைந்து விசாரணை மேற்கொண்டு, தோட்டகிரி சாலையைச் சேர்ந்த மனோஜ் என்பவரை கைது செய்து, அவர் வேறு எங்கெல்லாம் இத்தகைய பித்தலாட்ட வேலைகளை செய்துள்ளார் என்பது குறித்து வினவி வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads