Hosur Firefighters Rescue Baby Crow Trapped in Discarded Nylon Net | Hosur News Update - Video
Hosur Firefighters Rescue Baby Crow Trapped in Discarded Nylon Net
📅 வெளியீடு நாள்: 02-09-2026
📄 விளக்கம்
A young crow near Hosur Bus Stand suffered a serious leg injury after becoming trapped in discarded nylon netting caught on a tree branch. The bird had reportedly just begun attempting to fly from its nest when its leg became entangled in the net.
Hosur firefighters rescued the young crow, which received first aid with the assistance of veterinary doctors and is now under human care.
The incident highlights the dangers posed to birds and other wildlife by discarded plastic and nylon materials.
தீயணைப்புத் துறையினர் மீட்ட ஓசூர் காக்கா குஞ்சு கதை...
ஓசூர் பேருந்து நிலையம் எதிரே, அம்மா அப்பா காகங்கள் ஒன்றாக சேர்ந்து, ஒரு மரத்தின் மீது தனது வீட்டை கட்டின. முட்டையிட்டு தனது குழந்தையை வளர்த்து வந்தன.
மனிதர்கள் அப்பகுதியில், பிளாஸ்டிக் மற்றும் நைலான் நெட் பொருட்களை பயன்படுத்திவிட்டு ஆங்காங்கே தூக்கி எறிந்தனர். தூக்கி எறிந்த நைலான் நெட்டில் ஒன்று காற்றில் பறந்து, காக்கா கூண்டு அருகே மரத்தின் கிளையில் மாட்டியது.
காக்கா குஞ்சு வளர்ந்துவிட்டது. முதல் முறையாக பறக்க முற்பட்டது. கூண்டை விட்டு பறந்த குழந்தை காக்கா, மரக்கிளையில் அமர்ந்தது. காலில் நைலான் நெட்டு மாட்டிக் கொண்டது. தன்னை விடுவிக்க முயன்று, ஒரு காலை முறித்துக் கொண்டது. இப்போது அது நிரந்தர ஊனம்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து குழந்தை காக்காவை காப்பாற்றி, கால்நடை மருத்துவர்கள் மூலம் முதலுதவி வழங்கி, ஒரு மனிதரின் அரவணைப்பில் இப்போது உள்ளது.
நாம் தூக்கி எறியும் நெகிழி... காகங்களின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல... மனிதர்களின் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல்...








