Encroached Houses Demolished During Land Recovery Drive Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Encroached Houses Demolished During Land Recovery Drive Near Hosur

📅 வெளியீடு நாள்: 27-05-2026

📄 விளக்கம்

Revenue department officials carried out a demolition drive at Muneeswarar Nagar near Bagalur in Hosur, removing houses allegedly constructed on government poramboke land.

Authorities stated that repeated encroachments continued despite earlier allotment of alternative sites to some residents.

More than 300 police personnel were deployed for security during the operation.

ஓசூர் அருகே முப்பதற்கும் மேற்பட்ட வீடுகள் பொக்லைன் வைத்து இடித்து அகற்றம். 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன், வட்டாட்சியர் தலைமையில் அரசு நிலத்தை மீட்கும் பணியில், வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

ஓசூர் அடுத்த பாகலூர் அருகே, முனீஸ்வரர் நகர் பகுதியில், குடும்பங்கள் பலர் கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

கருணை அடிப்படையில், அரசு முதலில் ஆக்கிரமிப்பில் இருந்தவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கியுள்ளது. இதை அறிந்த மேலும் சிலர், அதே பகுதியில் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். அவர்களுக்கும் கருணை அடிப்படையில், அரசு சார்பில் மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்படுவதை தொடர்ந்து, இம்முறை அங்கு கட்டப்பட்ட முப்பத்தி மூன்று வீடுகளும் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இடதுசாரி கட்சியினர் அரசு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads