Hosur IT Couple Inspires with Natural Farming Initiative Near Kelamangalam | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur IT Couple Inspires with Natural Farming Initiative Near Kelamangalam

📅 வெளியீடு நாள்: 22-03-2026

📄 விளக்கம்

A young couple from Hosur is gaining attention for successfully balancing their IT careers in Bengaluru with natural farming.

Pragalnathan and his wife are implementing Nammalvar’s farming principles on a 5-acre land near Kelamangalam.

They cultivate crops such as strawberry and broccoli using natural farming methods without chemical inputs.

Their approach focuses on biodiversity, growing multiple crops together to create a sustainable ecosystem.

Their initiative is emerging as an inspiration for many aspiring young farmers.

ஓசூர் இளம் தம்பதியின் அசத்தல் முயற்சி! IT வேலைக்கும் நேரம்… இயற்கை வேளாண்மைக்கும் நேரம்…

நம்மாழ்வார் கோட்பாடுகளை, தனது விளை நிலத்தில் முயற்சிக்கும் ஓசூர் இளைஞர் ப்ரகலநாதன் மற்றும் அவரது துணைவி. இருவரும் பெங்களூருவில் பொறியாளர்களாக, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் நிலையில், ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே, கௌதாளம் அடுத்த பச்சப்பநட்டி செல்லும் சாலையில், சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை சார்ந்த வேளாண்மையை செயல்படுத்தி வருகின்றனர்.

ஸ்ட்ராபெரி, ப்ராக்கோலி போன்ற பயிர்களையும், முழுமையாக இயற்கை முறையில் வெற்றிகரமாக சாகுபடி செய்து வருகின்றனர்.

இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன், பல்லுயிர் சூழலை உருவாக்கும் வகையில், ஒரே வகை பயிர் அல்லாமல், பலவகையான செடிகளை ஒன்றுக்கு ஒன்று சார்ந்தவாறு வளர்த்து வருகின்றனர்.

தம்பதியினரின் முயற்சிகள் பலருக்கும் ஒரு புதிய வழிகாட்டியாக அமையட்டும்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads