Low-Hanging Electric Lines Over Homes Raise Safety Concerns in Kelamangalam | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Low-Hanging Electric Lines Over Homes Raise Safety Concerns in Kelamangalam

📅 வெளியீடு நாள்: 21-03-2026

📄 விளக்கம்

Residents of Netaji Nagar (GP area) in Ward 6 of Kelamangalam Municipality have raised concerns over low-hanging three-phase electric lines passing across residential rooftops.

According to locals, the lines are positioned at a dangerously low height, posing a serious threat to residents, particularly children who access terraces.

Residents have urged the Electricity Board to take immediate action to relocate and secure the power lines to prevent potential accidents.

ஓசூரை அடுத்த கெலமங்கலத்தில், மூன்று வயது குழந்தை கையை உயர்த்தினாலே மின்சாரம் தாக்கும் நிலை!. மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?

கெலமங்கலம் நகராட்சி, ஆறாவது வார்டு, நேதாஜி நகர் பகுதியில், வீடுகளின் மொட்டை மாடிகளை தாழ்வாக கடந்து செல்லும், மின்வாரியத்தின் மும்முனை மின்சார வடங்கள்.

மூன்று வயது குழந்தை தனது வீட்டின் மொட்டை மாடிக்கு படியேறி விளையாட சென்று, கையை சற்று உயர உயர்த்தினால், மும்முனை மின்சாரம் தாக்குவது உறுதி என்கிற அளவில், குறுக்கும் நெடுக்குமாக, தாழ்நிலையாக எடுத்துச் செல்லப்பட்டு இருப்பது உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது, என பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக மின் வடங்களை முறைப்படுத்தி, பாதுகாப்பாக அமைத்து தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads