Workers Protest Outside Pharmaceutical Manufacturing Unit in Hosur SIPCOT Phase II | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Workers Protest Outside Pharmaceutical Manufacturing Unit in Hosur SIPCOT Phase II

📅 வெளியீடு நாள்: 11-07-2026

📄 விளக்கம்

Around 100 workers protested outside a pharmaceutical manufacturing unit in Hosur SIPCOT Phase II, raising workplace-related demands and other allegations.

Around 100 Workers Protest Outside Pharmaceutical Manufacturing Unit in Hosur

Around 100 workers, including women employees, staged a protest outside a pharmaceutical manufacturing unit in SIPCOT Phase II, Hosur, raising various workplace-related demands.

During the protest, women workers alleged inappropriate conduct by a manager, while a trade union leader raised concerns regarding the factory's waste disposal practices. The company had not responded to these allegations at the time of publication.

ஓசூர் சிப்காட் இரண்டில் இயங்கும் மயிலான் மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராக, பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 100 தொழிலாளர்கள், தொழிற்சாலை வாயிலில், இன்று பிற்பகலில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண் தொழிலாளர்கள் பணி நேரத்தில் கழிவறைக்கு சென்று வந்தால், பொருத்தமற்ற மற்றும் பண்பாடற்ற கேள்விகளை, தொழிற்சாலையின் குறிப்பிட்ட ஒரு மேலாளர் கேட்பதாக குற்றம் சாட்டி, தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

தொழிற்சங்க தலைவர்களுள் ஒருவரான மாரிமுத்து பேசும் பொழுது, தொழிற்சாலையின் கழிவுகள் எவ்வாறு அப்புறப்படுத்தப்படுகிறது, அவை ஏற்படுத்தும் மாசு குறித்து தெரியும், என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

உள்ளூர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளையோருக்கு இந்நிறுவனத்தில் பணி வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads