Safety Roller Barriers Being Installed on Panchapalli Dam Road | Hosur News Update - Video
Safety Roller Barriers Being Installed on Panchapalli Dam Road
📅 வெளியீடு நாள்: 18-05-2026
📄 விளக்கம்
Authorities have begun installing modern roller safety barriers along the Panchapalli Dam road near Denkanikottai to improve commuter safety.
The barriers are intended to reduce accident impact and help prevent vehicles from falling into the adjacent reservoir.
The project covers nearly two kilometres of roadway.
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்த பஞ்சப்பள்ளி அணை சாலையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மஞ்சள் நிற உருளை தடுப்புகள்.
தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி அணை சாலை வழியாக பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால், அணை பகுதியில் இடது புறம் நீர் தேக்கமும், வலது புறத்தில் மலை பகுதியும் அமைந்துள்ளது.
நாளொன்றுக்கு இச்சாலையை சுமார் 5,000 மக்கள் கடந்த செல்வதாக கூறப்படுகிறது.
சாலையின் நீர்த்தேக்க பக்கவாட்டில் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு, முனியப்பன் கோவில் முதல் பஞ்சப்பள்ளி அணை எல்லை வரை, இந்த உருளை தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இத்தகைய தடுப்புகள், சாலை விபத்துகளை முழுமையாக தடுக்க இயலாவிட்டாலும், விபத்து ஏற்படும் பொழுது, வண்டிகள் உருண்டு தண்ணீரில் மூழ்கும் நிலைமையை தடுப்பதாக இந்த பணியை மேற்கொள்ளும் பொறியாளர்கள் தெரிவித்தனர்.








