HosurOnline
HosurOnline  ›  இந்திய திருமண சட்டங்கள்  ›  Amazon.in -இல் நான் ஏமாந்த கதை!
இந்திய திருமண சட்டங்கள்

Amazon.in -இல் நான் ஏமாந்த கதை!

Amazon.in -இல் நான் ஏமாந்த கதை!

விலை குறைவாக கிடைக்கிறது என்கிற மனதளவிலான முழு நம்பிக்கையால் தூண்டப்பட்டு நம்மில் பலரும் நிகழ்நிலை வணிக தளங்களின் மூலமாக பொருட்களை வாங்குகிறோம்.

பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான பொருட்கள் விலை குறைவாக கிடைப்பதால் நமக்கு இத்தகைய முழுமையான நம்பிக்கை ஏற்படுகிறது.

இந்த நம்பிக்கைதான் முதல் படியாக இந்த நிகழ்நிலை வணிக தளங்களுக்கு தங்களது ஏமாற்று வேலைகளை துவங்க ஏதுவாகி அமைகிறது.


ஏமாற்றும் வழிமுறை:

கடந்த பெப்ரவரி 2020, 5 ஆம் நாள், உடல்நலத்திற்கு, முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்ட கரும்பு இனிப்பு தீயது என பலரும் சொல்லக் கேட்டு, பாதியளவே தூய்மையாக பட்ட "பாரி நிறுவனத்தின், அம்ரித்ட என்ற விற்பனை பெயரில் விற்கப்படும் கரும்பு இனிப்பை" Amazon.in என்ற இணையதளம் மூலமாக தருவித்தேன்.

இந்தக் குறிப்பிட்ட பொருளை தமிழகத்தின் திருச்சி நகரைச் சார்ந்த ஜெய் ஷாப்பிங் என்ற நிறுவனம் அமேசான் டாட் இன் விற்பனை செய்கிறது.

அவர்கள் சொன்னபடி சொன்ன விலைக்கு எனக்கு இரண்டு கிலோ பாரி அம்ரித் திருச்சியில் இருந்து ஓசூருக்கு அனுப்பி வைத்தனர்.

நான் கேட்டது என்னவோ 2 கிலோவாக ஒற்றை பொட்டலம் என்றாலும் அவர்கள் அனுப்பி வைத்தது 500 கிராம் எடை கொண்ட 4 பொட்டலங்கள்.

பொட்டலங்களில் உள்ள அதன் காலாவதி நாளை பார்ப்பதற்காக ஒரு பொட்டலத்தை மட்டும் எடுத்து பார்த்த பொழுது எம் ஆர் பி என்ற இடத்தில் வெற்றாக இருந்தது.

மற்ற மூன்று பொட்டலங்களையும் எடுத்து பார்த்த பொழுது ஒன்றில் பாதி அளவு எம்ஆர்பி அளிக்கப்பட்ட நிலையிலும் மற்றொன்றில் ஒரு பொட்டலத்தில் விலை ரூபாய் 40 என்றும் குறிக்கப் பட்டிருந்தது.

அதாவது நான்கு பொட்டலங்களுக்கும் ஆன மொத்த விலை 160 ரூபாய்.  அமேசான் டாட் இன் எனக்கு விற்ற விலை ரூபாய் 379.  அவர்கள் கூற்றின்படி பொருளின் உண்மையான விலை 449.  தள்ளுபடி 16 விழுக்காடு!!!

நிகழ்நிலை தளத்தின் ஏமாற்றும் வழிமுறை எத்தகையது என்பது இதன் மூலம் புரிகிறது.  அதாவது இல்லாத விலை ஒன்றை பொருளுக்கு முடிவு செய்து வெளியிட்டு, அதிலிருந்து தள்ளுபடி எனச்சொல்லி பொருளின் உண்மை விலையிலிருந்து இருநூற்று ஐம்பது விழுக்காடு விலை வைத்து விற்கிறார்கள்.

முழு கட்டுரையையும் இங்கே பதிவிரக்கு பார்க்கவும்


Share this Post: Facebook X / Twitter WhatsApp