6 Kg Cabbage Shocks Hosur! 🥬 Farmers in Tears as Traders Refuse to Buy | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

6 Kg Cabbage Shocks Hosur! 🥬 Farmers in Tears as Traders Refuse to Buy

📅 வெளியீடு நாள்: 15-09-2025

📄 விளக்கம்

A Hosur farmer grows giant cabbages weighing 6 kg each near Thenkanikottai, but faces heartbreak as traders refuse to purchase them. 💔

➡️ Learn how farming practices like excess fertilizer, spacing, and over-watering led to these oversized cabbages.
➡️ Expert Dr. Muthupandian explains the science behind the unusual growth.

📌 A story of success turning into pain — farmers need better awareness & support.

ஓசூர் அருகே ஆறு கிலோ கொண்ட பெரிய அளவில் விளைந்த முட்டைக்கோசை வாங்க மறுத்த விற்பனையாளர்கள்! சாதனை புரிந்தும் வேதனையில் முட்டைக்கோசை உற்பத்தி செய்த உழவர்.

தேன்கனிகோட்டை அடுத்த செப்புக்கோட்டை அருகே, இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் மூன்று லட்சம் செலவு செய்து, முட்டைக்கோசுகளை உழவர் ஒருவர் விளைவித்தார்.

அவை ஒவ்வொன்றும் பெரிய அளவில் சுமார் ஆறு கிலோ கொண்டதாக விளைந்தது. பெரிய முட்டைக்கோசுகளை வாங்குவது இல்லை என, விற்பனையாளர்கள் தெரிவித்து விட்டதால், செய்வதறியாது திகைத்து நிற்கிறார், அந்த உழவர்.

இது குறித்து ஓசூர் ஆன்லைன் சார்பில், வேளாண்மை துறையில் வல்லுநராக விளங்கும் முனைவர் முத்துப்பாண்டியிடம் கருத்து கேட்டபோது, பெரிய அளவிலான முட்டைகோஸ் விளைவிக்கும் முட்டைக்கோஸ் இன நாற்றை தேர்ந்தெடுப்பது, அளவுக்கு அதிகமான யூரியா போன்ற உரம் இடுவது, செடிகளுக்கு இடையே பெரிய அளவில் இடைவெளி விடுவது, தேவைக்கும் கூடுதலாக தண்ணீர் பாய்ச்சுவது ஆகிய தவறுகளால் இவ்வாறு பெரிய அளவிலான முட்டைக்கோஸ் விளையும் என்று தெரிவித்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads