Allegations of Lack of Transparency and Overcharging at Hosur Kauvery Hospital Following Student's Death | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Allegations of Lack of Transparency and Overcharging at Hosur Kauvery Hospital Following Student's Death

📅 வெளியீடு நாள்: 27-09-2026

📄 விளக்கம்

A detailed report on the accusations made by the family of a 21-year-old nursing student against Hosur Kauvery Hospital. The article covers the ₹5.5 Lakh medical bill, the 20-hour discharge delay, and the hospital's response regarding the treatment provided.

ரமணா பட பாணியில் செயல்பட்டதா ஓசூர் காவேரி மருத்துவமனை? பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தார் நேரடி குற்றச்சாட்டு!

கடந்த 24 ஆம் நாள், உத்தனபள்ளி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நர்சிங் பயின்ற இளம் பெண், வீட்டில் விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை, ஏதோ ஒரு சூழலில் உட்கொண்டு விட்டாராம்.

அதை தொடர்ந்து ஓசூர் காவேரி மருத்துவமனைக்கு பெற்றோர் பெண்ணை அழைத்து வந்துள்ளனர். "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, என் மகளை காப்பாற்றுங்கள்" என மருத்துவமனையிடம் தாம் கூறியதாக பெண்ணின் தந்தை கூறுகிறார்.

இதை தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களில் சுமார் 5 1/2 லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவை பெற்றோரிடமிருந்து மருத்துவமனை பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நாள், பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் அதனால் டிஸ்சார்ஜ் செய்யும்படியும் மருத்துவமனையிடம் பெற்றோர் கேட்டுக் கொண்டார்களாம்.

இருப்பினும், சுமார் 20 மணி நேரம் காலம் தாழ்த்திய நிலையில், உயிர் இருப்பது போன்ற ஒரு நிலையில், ஆம்புலன்ஸில் ஏற்றியதாகவும், உயிர் இல்லாத நிலையை கண்டறிந்த உடன், உடலை உடனடியாக வேறு இடத்திற்கு மருத்துவமனை மாற்றியதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையே மருத்துவத் துறை சார்ந்த பெண்ணின் உறவினரான லோகநாதன் என்பவர், டிஸ்சார்ஜ் சம்மரி மருத்துவமனையிடம் கேட்ட பொழுது, கையால் வெள்ளைத் தாளில் எதையோ எழுதி, கையொப்பமின்றி ரப்பர் ஸ்டாம்ப் மட்டும் வைத்து மருத்துவமனை வட்டாரம் வழங்கியதாம்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் வினவய போது, "நாங்கள் மூன்று முறை ஸ்டமக் கிளீன் செய்தோம், மூன்று முறை ரத்தத்தை முழுமையாக டயாலிசிஸ் செய்தோம், கட்டாயப்படுத்தி கேட்டதால் நாங்கள் டிஸ்சார்ஜ் சம்மரியை கையால் எழுதிக் கொடுத்தோம்" என பல்வேறு தகவல்களை கூறுகின்றனர்.

எது எப்படியோ, இவ்வளவு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனை, வெளிப்படைத்தன்மை இன்றி, திட்டமிடாமல் செயல்பட்டது வியப்பாக இருக்கிறது என, ஓசூர் மருத்துவமனை வட்டாரங்களை பேசிக் கொள்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads