Hosur Daylight Theft Attempt: Two Men With Fake Number Plate Fail to Break House Lock | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Daylight Theft Attempt: Two Men With Fake Number Plate Fail to Break House Lock

📅 வெளியீடு நாள்: 23-09-2026

📄 விளக்கம்

A daylight theft attempt was reportedly made in Muneeswaran Nagar, Hosur, around noon. Two men allegedly arrived on a two-wheeler with a fake number plate and attempted to break a house lock using an iron rod. The attempt reportedly failed when the lock could not be broken. The homeowner has also raised concerns about the police jurisdiction while attempting to file a complaint.

பட்ட பகலிலும் ஓசூரில் திருட்டு முயற்சி! கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்ன எலசகரியில் திருட்டில் ஈடுபட்ட நபர் போன்றே, காலில் Sneaker ஷூ, கையுறை, அதே போன்ற இரும்பு ராடு... ஆனால் இந்த திருடன், திருட்டு முழியும் பதட்டமான உடல் அசைவும் கொண்டிருக்கிறார்.

முனீஸ்வரன் நகர் பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு முயற்சி பகல் சுமார் 12 மணி.

போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட இரு சக்கர வண்டியில் இரு நபர்களாக வந்திரங்கிய திருடர்கள், பூட்டு வலுவாக இருந்ததால் உடைக்க இயலாமல், வந்த வேலையை பாதியில் விட்டு சென்றுள்ளனர்.

மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற நிலையில், மறுநாள் வாங்க பார்க்கலாம் என அனுப்பி வைக்கப்பட்டாராம் வீட்டின் உரிமையாளர்! பின்னர், முனீஸ்வரன் நகர் பகுதி, ஓசூர் நகர் காவல் எல்லைக்கு உட்பட்டது என எல்லை தகராறும் நடத்தப்பட்டதாம்!

ஓசூர் மக்கள் தங்களது உடைமைகளை பாதுகாக்க தாங்களே முயற்சி செய்து கொள்ள வேண்டும்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads