HOFARWA - Hosur Residents’ Welfare Federation Meets | New Office Bearers Elected 🗳️ | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

HOFARWA - Hosur Residents’ Welfare Federation Meets | New Office Bearers Elected 🗳️

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

On August 24 (Sunday), the Hosur Residents’ Welfare Federation held a general body meeting at Kamarajar Colony.

✔️ 40+ welfare associations participated
✔️ New office bearers elected unanimously
✔️ Key resolutions passed to address civic issues & strengthen democratic decision-making

👉 A strong step towards solving Hosur’s residential problems through unity and collaboration.

கடந்த நாள் ஆகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நீலகண்டன், சிவக்குமார், முருகன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் தலைமையில், பொதுக்குழு கூட்டம் ஓசூர் காமராஜர் காலனியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒரு மனதாக, புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பேற்றுக் கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், குடியிருப்பு சங்கங்களின் பொறுப்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு பதிவை புதுப்பிப்பது, குடியிருப்பு பகுதிகளின் இடர்பாடுகளை தீர்ப்பதற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வது, முறையாக பொதுக்குழுவை அவ்வப்போது கூட்டி முடிவு எடுப்பது, மக்களாட்சி முறையில் கூட்டமைப்பை வழி நடத்துவது உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads