Hosur Bridge Bearing Broken Again?! 🤦♂️ NHAI’s Comedy of Errors! 🚧😂 | Hosur News Update - Video
Hosur Bridge Bearing Broken Again?! 🤦♂️ NHAI’s Comedy of Errors! 🚧😂
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Remember the Hosur Bus Stand Bridge that broke on June 21? 🏗️
NHAI promised to fix it in 30 days.
Now, almost 90 days later, what do we see? 👀
👉 A few workers scratching the broken bearing like it’s a mystery puzzle 🧩…
👉 Replacement bearing brought in, but guess what — it broke too? 🤯
This isn’t road safety… it’s turning into a comedy serial at taxpayer cost.
Will Hosur ever get a reliable bridge? Or do we need a stand-up comedy license for NHAI first? 😂
ஓசூர் பாலம், மீண்டும் உடைந்தது பேரிங்! ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் ஓசூர் பேருந்து நிலையம் நேர் எதிர் புறம் அமைந்துள்ள பாலம் கடந்த ஜூன் 21 ஆம் நாள் பிற்பகலில் உடைந்தது. இரண்டு நாளில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட நெடுஞ்சாலை ஆணையம், 30 நாட்களுக்குள் பாலத்தை சரி செய்வதாக உறுதியளித்தது.
90 நாட்கள் நெருங்குகின்ற இந்த நேரத்தில், பாலத்தின் ஒரு பகுதியை முழுமையாக மூடிவிட்டு, பாலத்தின் கீழே, வடநாட்டு தொழிலாளர்கள் மூன்று நான்கு பேர் நின்று கொண்டு, பாலத்தின் பேரிங் உடைந்த அடிப்பகுதியை தடவி தடவி பார்ப்பதாக மட்டுமே நம் கண்களால் காண இயன்றது.
ஓசூர் ஆன்லைன் சார்பில், புலனாய்வு மேற்கொண்டதில், இவர்கள் எடுத்து வந்த பேரிங்கும், அங்கே பொருத்த பட வேண்டிய பேரிங்கும் பொருத்தமற்று இருப்பதாகவும், பொருத்த முயன்ற போது அதுவும் உடைந்து விட்டதாகவும், நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு செய்திகள் கிடைக்கின்றன.
நமது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஓசூரை காப்பாற்ற வேண்டும்!