😂 Not a Pro Thief! 20-Year-Old girl Caught Red-Handed in Hosur Bus 🎒✨ | Hosur News Update - Video
😂 Not a Pro Thief! 20-Year-Old girl Caught Red-Handed in Hosur Bus 🎒✨
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
In Hosur, a comedy of errors turned into a police case! A 20-year-old woman named Anjali, along with her partner, tried to steal a jewelry box from a passenger on a government bus. But guess what? The “robbery attempt” went so wrong that they got caught immediately and were handed over to the police. 🚨
Sometimes, crime isn’t just dangerous… it’s downright funny when it fails this badly! 🤦♀️
👉 Watch this hilarious true story from Hosur and laugh at how NOT to steal!
ஓசூரில் சரியாகத் திருடாததால் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட இருபது வயது அஞ்சலி. தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் கடந்த நாள் தர்மபுரியில் இருந்து பெங்களூர் செல்வதற்கு பேருந்தில் பயணித்துள்ளார். ராயக்கோட்டையில் இரண்டு பெண்கள் அதே பேருந்தில் ஏறி உள்ளனர். பேருந்து உத்தனபள்ளி அருகே வந்தபோது, இருவரும் சேர்ந்து, சிவகாமி வைத்திருந்த நகை பெட்டியை திருடியுள்ளனர். பெட்டியை உருவும் போது சிவகாமி விழித்துக் கொண்டார். அவர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடம் புகார் அளித்ததன் பேரில், ஓசூர் நகர் காவல் நிலையத்தில் திருடிகள் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். காவல் நிலைய வினவலில், திருடிகள் இருவரும் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே வலசையூரைச் சேர்ந்த தேவி மற்றும் இருபது வயது அஞ்சலி என்பது தெரியவந்தது.