Hosur’s Hidden Peaceful Picnic Spot! 🏞️ Shoolagiri Dam | Hosur News Update - Video
Hosur’s Hidden Peaceful Picnic Spot! 🏞️ Shoolagiri Dam
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Looking for a calm and beautiful weekend getaway near Hosur? 🛶✨
Just 3 km from Shoolagiri, the Shoolagiri Dam is surrounded by hills, tall trees, and chirping birds 🕊️🌳.
With 18m height and 600m length, this dam offers stunning views and total peace – no crowds, only nature! 🌿
👉 A must-visit spot for those who love serenity and a true picnic vibe.
ஓசூர் அருகே இந்த வெள்ளிக்கிழமை நாம் சுற்றி பார்க்க இருக்கும் இடம், சூளகிரி அணை. ஓசூரில் இருந்து எளிதாக சென்று வரத்தக்க அணை என்றால், அது ஓசூர் கிருஷ்ணகிரி இடையே அமைந்துள்ள சூளகிரிக்கு அருகே அமைந்துள்ள அணை. சூளகிரியில் இருந்து சுமார், மூன்று கிலோ மீட்டர் பயணித்தால், அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த அணையை சென்றடையலாம்.
சுமார் 18 மீட்டர் உயரம், 600 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணை, வறண்ட நாட்களில் கூட, இந்த அணையை சுற்றி பார்ப்பது என்பது மிக அற்புதமான கண்கொள்ளாக் காட்சி. இந்த அணை, சின்னார் தோன்றுமிடத்தில் அதன் குறுக்கே அமைந்துள்ளது.
அணையை சூழ்ந்திருக்கும் மலைகளை பார்க்கும் அனுபவம், சொற்களில் அடக்கி விட முடியாது. உயரமான மரங்கள், பறவைகள் ஒலி தவிர்த்து வேறு எந்த ஒலியும் இல்லாத சூழல். அமைதியான இடம். கூட்ட நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமைதியை விரும்புபவர்களுக்கு சூளகிரி அணை, அருமையான Picnic spot!