🚨 Fake Doctors Flooding Hosur? | Hidden Danger Behind “Miracle Cures”! | Hosur News Update - Video
🚨 Fake Doctors Flooding Hosur? | Hidden Danger Behind “Miracle Cures”!
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Fake “healers” and unlicensed practitioners are spreading like wildfire in Hosur and nearby towns — claiming to cure everything from fever to cancer with powders and pills sold at sky-high prices.
Operating under names like yoga teacher, Chinese doctor, natural healer, and even practicing allopathy without training, they put innocent lives at risk.
⚠️ Volunteers urge immediate action to stop this menace before lives are lost.
👉 Watch this video and share to spread awareness.
ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புற்றீசல் போல் பெருகி வரும் போலி மருத்துவர்கள்.
பெரும்பாலான இத்தகைய ஓசூர் போலி மருத்துவர்கள் முறையாக எந்தப் பிரிவிலும் மருத்துவம் எதுவும் பயிலாமலேயே, தங்களை யோகா ஆசிரியர், சீன மருத்துவர், மருந்தில்லா மருத்துவர், Healer, இயற்கை மருத்துவர் போன்ற பல்வேறு அடையாளங்களை வைத்துக்கொண்டு யுனானி, சித்தா, ஆயுர்வேதா மற்றும் பல வேளைகளில் அலோபதி மருத்துவமும் மேற்கொண்டு வருகின்றனர். புற்றுநோய் முதல் வழக்கமான காய்ச்சல் வரை அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரே மருந்து எனக் கூறி, பிளாஸ்டிக் டப்பாக்களில் பொடி மற்றும் லேகியங்களை, பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இத்தகைய மருத்துவர்கள் ஓசூர் நகர் உட்பட, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்சட்டி, கெலமங்கலம் என அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுகின்றனர். போலி மருத்துவத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பே, உரிய நடவடிக்கைகள் வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.








