🤣 In Hosur "நந்தவனத்தில் ஒரு ஆண்டி!"?! | Historic Song Turns Real 🌸 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🤣 In Hosur "நந்தவனத்தில் ஒரு ஆண்டி!"?! | Historic Song Turns Real 🌸

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

At the flower shops under the Hosur bus stand bridge 🌉🌸, a heated clash over shop space led to high drama – even a petrol self-harm attempt 😳.

Public ask: “Why fight for an encroached spot that doesn’t belong to anyone?” 👉 Watch this mix of humor & harsh reality unfolding in Hosur!

ஓசூரில் நந்தவனத்தில் ஒரு ஆண்டி! இந்த முதல் மூன்று சொற்களை சொன்னாலே போதும், நம்மில் பெரும்பாலானோர் "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" என்ற கடுவெளிச் சித்தர் பாடலை முழுமையாக பாடி விடுவோம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஓசூரில் கடந்த நாள் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஓசூர் பேருந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள பாலத்தின் கீழ்ப்பகுதியில், ஏராளமான பூக்கடைகள், ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நாளொருபொழுதும், ஓசூர் மாநகராட்சிக்கும் நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் பொதுமக்கள் சார்பில் புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் பூக்கடை வைத்திருக்கும் ராம் நகரை சேர்ந்த பார்வதிக்கும், வேதகி என்ற மூதாட்டியின் மகன் வேல்முருகன் என்பவருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கடை வைப்பது தொடர்பாக மோதல் முற்றி, கடந்த நாள், பார்வதி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது.

கடையின் இடமே இவர்களது இல்லாத போது, இடத்திற்கான சண்டை எதற்கு? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads