Rs 100 Crore Super-Speciality Govt. Hospital in Hosur! 🚑 Six Floors, 420 Beds, Modern Care Coming Soon! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Rs 100 Crore Super-Speciality Govt. Hospital in Hosur! 🚑 Six Floors, 420 Beds, Modern Care Coming Soon!

📅 வெளியீடு நாள்: 10-09-2025

📄 விளக்கம்

Hosur is getting a brand-new Govt. Medical College Hospital worth Rs 100 crore.

420-bed capacity 🛏️

Built on 2.4 lakh sq. ft., 6 floors 🏢

Emergency, OPD, Radiology, Labs, Blood Bank 🧪

Special ward for senior citizens & ART (Assistive & Restorative Treatment) ♿

📍 Location: Rayakottai Road, near Karapalli.
A big leap in public healthcare for Hosur & Krishnagiri district! 🙌

ஓசூரில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டி முடித்து திறக்கப்பட இருக்கும் புதிய அரசு தலைமை மருத்துவமனை. சுமார் 420 படுக்கைகளும், இரண்டு புள்ளி நான்கு லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது. இந்த மருத்துவமனை ஆறு தளங்களைக் கொண்டதாக இருக்கும்.

அனைத்து விதமான சிறப்பு மருத்துவம் வழங்குவதற்கு தகுதி உடையதாக இம்மருத்துவமனை செயல்படும் விதத்தில், உயர் மருத்துவம் பயின்ற சிறப்பு மருத்துவர்கள் பணியாற்றுவார்கள். அவசர மருத்துவம், வெளி நோயாளிகள் பிரிவு, கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் ஆய்வகம் துறை, குருதி வங்கி என எல்லா கட்டமைப்புகளும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த மருத்துவமனையில், முதியோருக்கு என்று தனியாக ஒரு மருத்துவ பிரிவு அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. உடற்குறையுற்றோரின் செயற்பாடுகளுக்கு உதவும் கருவிகள் கொண்ட சிறப்பு பிரிவு, Assistive and Restorative Treatment - Art - Department செயல்படும்.

இம்மருத்துவமனை, ராயக்கோட்டை சாலையில், காரப்பள்ளி அருகே கட்டப்பட்டு வருகிறது. ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி, ஓசூர் புதிய பேருந்து நிலையம், தேசிய நெடுஞ்சாலை எண் 44 ஆகியவற்றிலிருந்து எளிதாக இந்த புதிய தலைமை மருத்துவமனை சென்றடையும் விதமாக, இணைப்பு சாலை, ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு, 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads