Hosur: Idol Dispute Turns Into Caste Clash 🚫🙏 A Call for Peace & Awareness | Hosur News Update - Video
Hosur: Idol Dispute Turns Into Caste Clash 🚫🙏 A Call for Peace & Awareness
📅 வெளியீடு நாள்: 10-09-2025
📄 விளக்கம்
In Kelamangalam, what began as a Vinayagar Chaturthi idol placement dispute sadly escalated into a caste-based clash and road protest.
Idol installation dispute → youth conflict ⚡
Case registered under caste atrocity law 🚔
Road blockade held in protest 🛑
Police intervened & diffused tension 🤝
👉 Reminder: Festivals are meant for devotion & unity, not division. Let’s not let caste or conflict take away the spirit of Vinayagar Chaturthi.
Peace must always be our priority. 🙏
விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறு, கெலமங்கலத்தில் ஜாதி பிரிவினையாக வடிவம் எடுத்து, சாலை மறியல் போராட்டம், என மோதலுக்கு வழிவகை வகுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ஆம் நாள் கெலமங்கலம் அண்ணா நகர் பகுதியில் பிள்ளையார் சிலை வைப்பது தொடர்பாக இரு பிரிவு இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. முதலில் அடிதடி வழக்காக பதிந்ததை, பின்னர் ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக, வன்கொடுமை வழக்காக மாற்றி காவல் துறையினர் ஐந்து இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை இளைஞர்களின் வாழ்க்கையை பால் கொடுத்தும் நடவடிக்கை எனக் கூறி, இளைஞர்களுக்கு ஆதரவாக ஒரு பிரிவு மக்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் கடந்த நாள் ஈடுபட்டனர். காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர்.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிள்ளையார் சிலை வைப்பது தொடர்பாக, காவல்துறையினர் முழுமையான கட்டுப்பாடுகளை விதித்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.