Heavy Rains in Thally 🌧 | Lakes Overflow, Farmers Rejoice | Urgent Warning on Hyacinth Growth | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Heavy Rains in Thally 🌧 | Lakes Overflow, Farmers Rejoice | Urgent Warning on Hyacinth Growth

📅 வெளியீடு நாள்: 10-09-2025

📄 விளக்கம்

Thally and surrounding areas near Denkanikottai received heavy rains yesterday, filling up most lakes and pushing Thally Lake into overflow mode. 🌊 Farmers are celebrating the much-needed water.

But there’s also a warning ⚠️ — farmers urge immediate removal of the thick water Hyacinth growth in Thally Lake. If ignored, sudden flooding could occur when overflow intensifies.

Will PWD officials act in time to prevent disaster?

தளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த நாள் கொட்டி தீர்த்த கனமழை. தளி ஏரி நிரம்பி, மறுகால் பாயும் நிலையில் உள்ளது. தளி மற்றும் தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஏற்கனவே நிரம்பி, மறுகால் பாய்ந்து வருகிறது.

அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர்ந்தால், விரைவாக நிரம்பி வழிய இருக்கும் பஞ்சப்பள்ளி அணை. மகிழ்ச்சியில் உழவர் பெருமக்கள்.

இதற்கிடையே, தளி ஏரியில் அடர்த்தியாக வளர்ந்து நிற்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற உழவர் கூட்டமைப்பு தலைவர்கள் கோரிக்கை. அவற்றை உடனடியாக அகற்றாவிட்டால், தளி ஏரியின் வெள்ளம் ஒரே நேரத்தில் பெருவெள்ளமாக மறுகால் பாய்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுகின்றனர். பொதுப்பணித்துறை உயர் பொறுப்பு அலுவலர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்களா?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads