ஓசூர் அருகே, தன்னலத்தின் உச்சகட்டம். Protect Hosur’s Waterways — Report Vandalism, Save Farmers & Livestock 🚜💧 | Hosur News Update - Video
ஓசூர் அருகே, தன்னலத்தின் உச்சகட்டம். Protect Hosur’s Waterways — Report Vandalism, Save Farmers & Livestock 🚜💧
📅 வெளியீடு நாள்: 21-09-2025
📄 விளக்கம்
A critical irrigation bund near Uthanapalli has been sabotaged — the breach at the Nagamangalam → Karukkanapalli channel is leaving local fields and animals without reliable water.
This channel and its check-bunds store rainwater, recharge groundwater and support farmers and livestock. Damaging them hurts livelihoods and the local ecosystem.
Please take these urgent steps:
• Report any vandalism or suspicious activity to the local Panchayat / Public Works Dept immediately.
• Authorities: temporarily close the breached gate and restore the bund to stop water loss.
• Police: investigate quickly and take strict action against the culprits.
• Farmers & residents: form a community watch and document incidents (photos, timestamps) — it helps enforcement.
• Everyone: share this post to raise awareness and protect our common water resources.
#Hosur #Irrigation #WaterSecurity #SaveOurWaters #Agriculture #CommunityAction #HosurOnline #ProtectResources
ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையை, ஓட்டை போட்டு சேதப்படுத்திய சமூக எதிரி. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை.
ஓசூரை அடுத்த உத்தனபள்ளி அருகே, நாகமங்கலம் ஏரியிலிருந்து கருக்கணபள்ளி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில், ஓடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் குறுக்கே, நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இது அப்பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், கால்நடைகள் மற்றும் பிற உயிரினங்கள் நீர் அருந்துவதற்கும் வழி வகை ஏற்படுத்திக் கொடுத்து வந்தது.
நாகமங்கலம் ஏரி நிரம்பாத நிலையில், விளை நிலங்களில் பெய்த மழை நீர் வடிந்து, இந்த ஓடையில் ஓடி, தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பகுதி உழவர்களும் கால்நடைகள் வைத்திருப்பவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த நாள், தொட்டமட்டரை அருகே உள்ள தடுப்பனையின் அடிப்பகுதியை, யாரோ துளையிட்டு சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுப்பணி துறையினர் இது தொடர்பில் கவனம் செலுத்தி, உடனடியாக துவாரத்தை அடைக்க வேண்டும் எனவும், காவல்துறை குற்றவாளியை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.