Hosur / Denkanikottai Farmers Betrayed Again — Market Cheats Exposed! 🚜⚖️ | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur / Denkanikottai Farmers Betrayed Again — Market Cheats Exposed! 🚜⚖️

📅 வெளியீடு நாள்: 22-09-2025

📄 விளக்கம்

Local farmers in Hosur & Denkanikottai are losing lakhs after traders and inspectors refuse to buy perfectly grown produce — citing taste, size or colour — and forcing prices down. From green chillies to watermelons and big brinjals, growers report heavy losses and unfair resale.

Citizens and volunteers demand immediate action from the District Collector & State Govt to stop these cheating practices and protect farmer livelihoods.

📣 What you can do: share this video, tag local authorities, and support farmers by buying direct or reporting suspicious market behaviour.

ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டார உழவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாக தகவல்! உழவர்களை ஏமாற்றும் சூழ்ச்சிகளை கட்டவிழ்க்கிறது இந்த காணொளி.

காட்சி ஒன்று. கடந்த ஆண்டு, தேன்கனிகோட்டை அருகே விளைந்த பச்சை மிளகாய் ருசி சரியில்லை என சொல்லி, வியாபாரிகள் வாங்க மறுத்ததாக செடி விற்பனை செய்த, நர்சரி உரிமையாளரை குற்றம் சொல்லி உழவர் ஒருவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். பச்சை மிளகாய் பெரிதாக வளர்ந்து இருந்ததால் அவற்றை கொள்முதல் செய்ய இயலாது என்று கொள்முதல் செய்ய வந்தவர்கள் கூறியதாக அப்போதைய செய்தி சொல்கிறது. இதனால் விலை சரிந்தது.

காட்சி இரண்டு. உணவு பாதுகாப்பு அதிகாரி, தனது படைகளுடன் ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை சென்று, தர்பூசணி பழங்கள் அழகானதாக மற்றும் ருசியானதாக இருப்பதாகவும், இவை செயற்கை முறையில் வண்ணங்கள் ஏற்றப்பட்டு ருசி ஊட்டப்பட்டதாக குற்றம் சாட்டினார். விலைகள் சரிந்தன.

காட்சி மூன்று. முட்டைக்கோஸ் பெரிய அளவில் விளைந்ததாக, கொள்முதல் செய்ய வந்தவர்கள் அதை வாங்க மறுத்து சென்று விட்டனர். உற்பத்தி செலவு 3 லட்சம் ரூபாய். பின்னர் கட்டப்பஞ்சாயத்து செய்து உழவருக்கு கொடுத்த விலை ஒன்றரை லட்சம் என்று கூறப்படுகிறது.

காட்சி 4. கேரட் பெரிய அளவில் விளைந்ததாக கூறி, கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். அதன்பின் அடிமாட்டு விலைக்கு அதே பொருளை வாங்க சிலர் முன் வருகிறார்கள்.

இவை அனைத்தும் நிகழ்ந்தேறியது தேன்கனிக்கோட்டை வட்டார பகுதியில் என்பது கவனிக்கத்தக்கது. நீதிமன்றங்கள் வாயிலாக, உழவர்களுக்கு இதில் தீர்வு கிடைக்காது என்பது அப்பட்டம். மாட்டிக்கொண்டால் நொடிப்பு ஏற்படுவது திண்ணம். மாவட்ட ஆட்சியரும் தமிழ்நாடு அரசும், ஏமாற்று பேர்வழிகள் இடம் இருந்து இந்த அப்பாவி உழவர்களை காக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads