Public Spoke… But Did Anyone Listen? 🤔 | Hosur Flyover Hearing | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Public Spoke… But Did Anyone Listen? 🤔 | Hosur Flyover Hearing

📅 வெளியீடு நாள்: 23-09-2025

📄 விளக்கம்

At the Hosur public consultation on the new Rs 38 crore flyover near the bus stand, citizens raised safety, traffic, and design concerns. But did the authorities actually listen—or was it just for formality?

ஓசூர் கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்துக்கள் கூறப்பட்டன, கேட்கப்பட்டனவா? என்பதுதான் கேள்வி.

ஓசூர் பத்தலபள்ளியில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பேருந்துகள் மற்றும் மக்கள், பேருந்து நிலையத்தினுள் வந்து செல்வதற்காக, சுமார் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒன்றேகால் கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டுவதற்கான பணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கியது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வாறு பாலக் கட்டுமான பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், இன்று மாலை 4 மணி அளவில், சிப்காட் இரண்டில் அமைந்துள்ள Fort கூட்ட அரங்கில் நடைபெற்றது.

சிப்காட் சார்பில் பேசியவர் கூறும் பொழுது, சுமார் பதினான்காயிரம் தொழிலாளர்கள் சிப்காட் இரண்டிற்கு நாள்தோறும் வந்து செல்வதாகவும், அதில் பெரும் பகுதியினர் பெண்கள் என்றும், பாலம் கட்டப்படும் பொழுது பாதுகாப்பான பேருந்து நிறுத்தம் தேவை என்று எடுத்துக் கூறினார். மேலும் கூறிய அவர், அருகில் உள்ள ஊர்களில் இருந்து, வரும் தொழிலாளர்கள் சாலையை குறுக்காக நடந்து கடப்பதாகவும், ஆகவே பாலம் வேலை நடைபெறும் பொழுது முறையான மாற்று ஏற்பாடுகள் அவர்களுக்கு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

H I A மற்றும் Traffic Warden சார்பில் பேசியவர், பாலப் பணிகள் தொடர்பான காலக்கெடு குறித்த திட்டங்களை தங்களிடம் பகிர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற்பாடாக போக்குவரத்தை சீர் செய்ய இயலும் என்று கோரிக்கை விடுத்தார்.

தன்னார்வலர் லட்சுமணன் பேசும் பொழுது, நீளமான வண்டிகள் வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டால், இப்போது உள்ள பாலத்திட்டத்தின்படி, கொடுக்கப்பட்டுள்ள Turning Radius போதுமானதாக இல்லை என்பதை குறிப்பிட்டார்.

சமூக ஆர்வலர் சுபாஷ் குறிப்பிடும் பொழுது, பாலம் கட்டுபவர்கள் முதலில் தூண்களைத் தான் கட்டுவார்கள். ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கழிவுநீர் ஓடை பணிகளை துவங்கி இருப்பது வியப்பளிப்பதாக கூறினார்.

மேலும் ஏராளமான சிறப்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் முடிவுரையாக, பொதுமக்களுக்கு இடர்பாடுகள் ஏற்படத்தான் செய்யும். பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என எளிதாக முடித்து வைத்தார்.

தயவு செய்து கண்ணை துடைத்துக் கொள்ளுங்கள். கூட்டம் நடைபெற்றதற்கான அடிப்படை குறித்து உட்பொருள் காண வேண்டாம்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads