ஓசூர் டாட்டா எலக்ட்ரானிக்ஸ், பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட இடர்பாட்டை திறம்பட கையாண்டு, சூழ்நிலையை அமைதிப்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறை.
ஓசூர் அருகே நாகமங்கலத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்திய ஒன்றிய அரசின், Affordable Rental Housing complexes Scheme திட்டத்தின் கீழ், டாட்டா நிறுவனம், "விடியல் ரெசிடென்சி" என்கிற பெயரில் குடியிருப்பு அமைத்து கொடுத்துள்ளது. இங்கு 13 அடுக்குமாடி குடியிருப்புகளும், ஒவ்வொன்றும் 11 அடுக்குமாடி தளங்களை கொண்டதாகவும் உள்ளது.
இந்த குடியிருப்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 6000 பெண் தொழிலாளர்கள் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில், ஒடிசாவை சேர்ந்த, 22 வயதுடைய நீலா குமாரி குப்தா என்கிற பெண்ணும் தங்கி இருந்துள்ளார். இவருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நெருங்கிய தோழியாக இருந்துள்ளார்.
கடந்த இரண்டாம் நாள், ஞாயிற்றுக்கிழமை, மகாராஷ்டிரா பெண் குளியலறையை பயன்படுத்த சென்றுள்ளார். அவர் அங்கு கேமரா பொருத்தப்பட்டு இருப்பது கண்டு, நீலா குமாரி மற்றும் பிற பெண்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உடனடியாக இது தொடர்பாக வினவி வந்துள்ளது. காவல்துறைக்கு புகார் கொடுப்பதை இவர்கள் தவிர்த்துள்ளனர்.
சுமார் 2000 பெண்கள், செவ்வாய்க்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட துவங்கினர். இதைத்தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக ஏராளமான காவல் துறையினரை அப்பகுதியில் பணியமர்த்தப்பட்டனர். பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்த காவல்துறையினர், கேமராவை குளியல் அறையில் பொருத்தியது நீலா குமாரி என்பதை கண்டறிந்தனர். அவருக்கு மனநல ஆலோசனை வழங்கி வினவியதில், அவரது 25 வயதுடைய, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, சந்தோஷ் என்கிற ஆண் நண்பரின் வற்புறுத்தலால் இந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
காவல்துறையினர் விரைந்து சந்தோஷை பிடித்து வினவியதில், நீலா குமாரி கூறியது உண்மை என்பது தெரிய வந்தது. நீலா குமாரிக்கு கேமரா பொருத்தத் தெரியாததால், அவர் அந்த கேமராவை அனைவர் கண்ணிலும் படும்படியாக வெளிப்படையாகவே வைத்திருந்துள்ளார். பதிவு செய்யப்பட்ட காட்சிகள் எதுவும் யாரிடமும் பகிரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பல்வேறு அமைப்புகள் இந்த சூழ்நிலையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, டாட்டா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமான முயற்சிகளில் ஈடுபடுவதாக உறுதியான தகவல்கள் கிடைத்தன. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறை, சூழ்நிலையை திறம்பட கையாண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அமைதிப்படுத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
திறம்பட செயல்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினரை, ஓசூர் தொழில் முனைவோரும், பொதுமக்களும், மனதார பாராட்டுகின்றனர்.








