சூளகிரி மற்றும் பாகலூர் வட்டாரங்களில் தங்கத்தை விட வேகமாக விலையேற்றத்தை காணும் நிலத்தின் விலை!. பணத்தை அள்ளி குவிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள்!. வருதோ… வரலையோ?, ஏதாவது ஒரு அறிவிப்பை அடிப்படையாக வைத்து, நிலத்தின் விலையை பல மடங்கு உயர்த்தி வருவாய் ஈட்டுகிறார்கள். நிலத்தை விற்று பெரிய அளவில் வருவாய் ஈட்டுவது நிலத்தின் உள்ளூர் உரிமையாளர்களா? என்றால்…, அதுதான் இல்லை.
குறிப்பாக, பாகலூர் - பேரிகை பகுதி, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தின் விலையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இரண்டாயிரமாவது ஆண்டு துவக்கத்தில் இப்பகுதியில் ரோஜா உள்ளிட்ட கொய்மலர் மற்றும் பல வண்ண கேப்ஸிகம் உற்பத்தி செய்வதற்கான வெப்பநிலை அமைந்திருப்பதை வைத்து நிலத்தின் விலை உயர்ந்து வந்தது.








