👉 Hosur’s Little Kodaikanal 🌄🍃 Hidden Hill Paradise! | Hosur News Update - Video
👉 Hosur’s Little Kodaikanal 🌄🍃 Hidden Hill Paradise!
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Did you know Hosur has its own Little Kodaikanal? 🌿
Welcome to Kodhakarai, part of the stunning North Melagiri Hills, just 44 km from Hosur via Denkanikottai.
At 3,000 ft elevation, this region is rich with wildlife — elephants 🐘, deer 🦌, bison 🦬, bears 🐻, and even leopards 🐆. Bird lovers can spot many rare species too!
The hills are often wrapped in mist, offering breathtaking views and cool weather that feels like touching the clouds ☁️. With green forests and serene vibes, this is Hosur’s hidden weekend escape.
Visitors can book forest guesthouses at Aiyur with prior permission from the Forest Department. 🚶♂️🌳
👉 Don’t miss exploring Kodhakarai – Hosur’s own Kodaikanal!
கொடகரை, ஓசூரின் லிட்டில் கொடைக்கானல். ஓசூரின் அழகிய காட்சி மிகுந்த பகுதிகளில், கொடகரை, பெட்டமுகிலாலம், அய்யூர் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய வடக்கு மேலகிரி மலை தொடரை குறிப்பிடலாம். இப்பகுதி, வடக்கு காவேரி வன உயிர் காப்பகத்தின் கீழ் அமைந்துள்ளது.
சுமார் மூவாயிரம் அடி உயரம் கொண்ட மலை தொடர்கள். அரிய வகை பறவைகளை காணும் வாய்ப்பு. காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் நடமாடும் பகுதி இது. காணும் கண்களுக்கு, குளிர்ச்சி ஏற்படுத்தும் பசுமை. மலைத்தொடரில் ஆங்காங்கே பனிமூட்டம் கூடியிருக்கும் கண்கொள்ளாக் காட்சி, மனதை புத்துணர்ச்சி அடைய செய்யும். சில நேரங்களில் வான் மேகத்தை தொட்ட அனுபவம்.
வனத்துறையினரின் அனுமதியுடன், அய்யூரில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக சுமார் நாற்பத்தி நான்கு கிலோமீட்டர் தொலைவில் இப்பகுதி அமைந்துள்ளது. கொடகரை உள்ளிட்ட பகுதிகளை சென்றடைவதற்கு முறையான சாலை வசதி இல்லாததால் மலைப் பாங்கான தொடர்களில் பயணிப்பது, கூடுதல் மகிழ்ச்சியும், புத்துணர்வும், புதிய அனுபவமும் தரும்.